வைகாசி சனிக்கிழமையை முன்னிட்டு சனிபகவானுக்கு சிறப்பு அபிஷேகம்
சிறப்பு பூஜை
வைகாசி சனிக்கிழமையை முன்னிட்டு செம்மலை மும்மூர்த்தி கோவிலில் உள்ள சனி பகவானுக்கு வாசனை திரவியங்கள் மூலம் அபிஷேகம் செய்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது.
மோகனூர் தாலுகா, எம்.ராசாம்பாளையத்தில், அறியாத ஊற்று செம்மலை மும்மூர்த்தி ஸ்தலம் உள்ளது. இங்கு, சனீஸ்வரபகவான், மேற்கு திசை நோக்கி தனி சன்னதியாக அமைந்துள்ளது. ஆண்டு தோறும் சனிப்பெயர்ச்சி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. நேற்று வைகாசி சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாட்டில் சனி பகவானுக்கு வாசனை திரவியங்கள் மூலம் அபிஷேகம் செய்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.இதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை வழிபட்டனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story