ஶ்ரீ நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்

ஶ்ரீ நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்
ஶ்ரீ நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்
அச்சரப்பாக்கம் ஆட்சீஸ்வரர் திருக்கோயிலில் மாசி சதுர்த்தசியையொட்டி ஶ்ரீ நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

அச்சரப்பாக்கம் ஆட்சீஸ்வரர் திருக்கோயிலில் மாசி சதுர்த்தசியையொட்டி ஶ்ரீ நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தமிழ் வருடத்தில் ஒவ்வொரு வருடத்திலும் சித்திரை திருவோணம், ஆனி உத்திரம், ஆவணி சதுர்த்தசி ,புரட்டாசி சதுர்த்தசி, மார்கழி திருவாதிரை, மாசி சதுர்த்தசி என 6 முறைகள் ஸ்ரீ நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.

செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் நகரில் உள்ள சைவ சமயக் குரவர்கள் நால்வரால் பாடல் பெற்ற சிவாலயமான ஸ்ரீ ஆட்சீஸ்வரர் திருக்கோயிலில் மாசி சதுர்த்தசியையொட்டி ஸ்ரீ நடராஜபெருமானுக்கு சீயக்காய் பொடி, மரகதப் பொடி, அரிசி மாவு , பன்னீர், இளநீர், பால், தேன், பழங்கள், தயிர்,சந்தனம் உள்ளிட்ட 15 வகையான சிறப்பு பொருட்களால் அபிஷேகம், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.

அதன் பின்னர்,வேத மந்திரங்களும், திருமுறை ஒத மேள தாளங்கள் சங்கொலி நாதம் முழுங்க மகாதீபாரதனை நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ நடராஜ பெருமானையும் சிவகாமசுந்தரியும் வழிபட்டனர். அதன் பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டது.

Tags

Next Story