வண்ணார்பேட்டை எப்.எக்ஸ் கல்லூரிக்கு சிறப்பு அனுமதி

வண்ணார்பேட்டை எப்.எக்ஸ் கல்லூரிக்கு சிறப்பு அனுமதி

எப்.எக்ஸ் பொறியியல் கல்லூரி 

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பி.இ. பயின்று பணியாற்றுபவர்கள் எம்.இ. முதுகலை பட்ட படிப்பில் சேர்ந்து படிப்பதற்கு அகில இந்தியா தொழில்நுட்ப கவுன்சில் (ஏ,ஐ.டி.சி) எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. பி.இ. படித்துவிட்டு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றி வருபவர்கள் நேரடியாக எம்.இ முதுகலை பட்ட படிப்பில் சேருவதை கருத்தில் கொண்டு புதிய திட்டத்தை ஏ,ஐ.டி.சி அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டம் தொடங்குவதற்கு நெல்லை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரிக்கு அகில இந்தியா தொழில்நுட்ப கவுன்சில் சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பணியாற்றும் பி.இ. படித்தவர்கள் எம்.இ மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயன்ஸ், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் பாடத்திட்டத்தில் சேரலாம். இதற்காக இரண்டும் கலந்த முறையில் எம்.இ கல்வி திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று டிப்ளமோ படித்துவிட்டு பணியாற்றுபவர்கள் பி.இ பயில எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரிக்கு அனுமதி கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் பணிபுரிந்து கொண்டே பொறியியல் முதுகலை பட்ட படிப்பை பயில்வதற்கு அகில இந்தியா தொழில்நுட்ப கவுன்சில் நல்ல வாய்ப்பு அளித்துள்ளது இதனை பணியாற்றுபவர்கள் நன்கு பயன்படுத்தி பலன் பெறலாம் என்று கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags

Next Story