மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு விழிப்புணர்வு

மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு விழிப்புணர்வு
கடையநல்லூர் மாற்றுத்திற னாளிகள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு விழிப்புணர்வு
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு விழிப்புணர்வு நடைபெற்றது.

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே ஆய்க்குடி அமர் சேவா சங்க வளாகத்தில் நடைபெறவிருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நேற்று மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் தலைமை வகித்து நூறு சதவீத வாக்குப்பதிவு வலியுறுத்தியும் மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் குறித்தும் விளக்கி கூறினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story