பள்ளிவாசல்களில் பக்ரீத் சிறப்பு தொழுகை - ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்பு

பள்ளிவாசல்களில் பக்ரீத் சிறப்பு தொழுகை - ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்பு

பக்ரீத் சிறப்பு தொழுகை

மதுரையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு திடல்கள், பள்ளிவாசல்களில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.

ஈதுல் அல்ஹா எனும் பக்ரித் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்திற்கு உட்பட்ட மகபூப்பாளையம், தமுக்கம் மைதானம், நெல்பேட்டை, ஹாஜிமார்தெரு, கோரிப்பாளையம்,ஆனையூர், கலைநகர், தபால்தந்திநகர், வள்ளுவர் காலனி, சிலைமான், மேலூர், திருமங்கலம், உசிலம்பட்டி, அலங்காநல்லூர் , உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள திடல்களிலும்(திறந்தவெளி), பள்ளிவாசல்களிலும் பக்ரித் பெருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

இந்த சிறப்பு தொழுகையில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட எராளமான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர். மதுரை எல்லிஸ்நகர் பகுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நடைபெற்ற சிறப்பு திடல் தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள், பெண்கள், குழந்தைகள் கலந்துகொண்டனர். தொழுகையின் முடிவில் இஸ்லாமிய பேச்சாளர்கள் பக்ரீத் பண்டிகையின் நடைமுறைகள் மற்றும் நன்மைகள் குறித்து எடுத்துரைத்தனர்.

பின்னர் உலக நன்மை வேண்டியும், உலகில் அமைதியும், சமத்துவமும் நிலவ வேண்டி சிறப்பு துஆ செய்தனர். பக்ரித் பெருநாள் தொழுகையை நிறைவேற்றிய பின் இஸ்லாமியர்கள் ஒருவருக்கு ஒருவர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துகொண்டனர். இதனை தொடர்ந்து இறைவனுக்காக தங்களின் கடமையை நிறைவேற்றும் வகையில் வீடுகளில் ஆடுகளை அறுத்து அதன் இறைச்சிகளை ஏழை எளிய மக்களுக்கு வழங்கி தியாகத்திருநாள் கடமையை நிறைவேற்றினர்.

Tags

Next Story