மானியத்துடன் கூடிய சிறப்பு வங்கி கடன் முகாம்

மானியத்துடன் கூடிய சிறப்பு வங்கி கடன் முகாம்


சிறப்பு வங்கி கடன் முகாம்


தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குறு சிறு வணிகர்களுக்கான மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான மானியத்துடன் கூடிய சிறப்பு வங்கி கடன் முகாம் நடைபெற்றது இதில் ஏராளமான வணிகர்கள் பங்கேற்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் 17 மற்றும் 18ஆம் தேதிகளில் அதிக கன மழை பெய்தது இதனால் சிறு வணிகர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர் தூத்துக்குடி மாவட்டத்தில் சிறு வணிகர்களின் தொழிலை மேம்படுத்து வகையில் தமிழக அரசு சார்பில் மானியத்துடன் கூடிய கடல் வழங்க தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட தொழில் மையம் சார்பில் குறு சிறு வணிகர்களுக்கான மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான மானியத்துடன் கூடிய சிறப்பு வங்கி கடன் முகாம் தூத்துக்குடியில் நடைபெற்றது. மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சொர்ணலதா தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் கூட்டுறவு வங்கி பொதுத்துறை வங்கிகள் மற்றும் தனியார் வங்கியில் என 14 வங்கிகளை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் கழகம் உள்ளிட்ட நிறுவனங்களில் இருந்து வருகை தந்த அதிகாரிகள் சிறு வணிகர்கள் அளித்த விண்ணப்பங்களை சரிபார்த்து அவர்களுக்கான கடன் வழங்குவதற்காக ஆணைகளை வழங்கி வருகிறார்கள் மேலும் கூட்டுறவு வாங்கி மூலம் சிறு வணிகர்கள் பயன்பாடு வகையில் 10 ஆயிரம் ரூபாய் முதல் வங்கி கடன் மானியத்துடன் வழங்கப்படுகிறது மேலும் பொதுத்துறை நிறுவனங்களில் ஒரு லட்ச ரூபாய் முதல் கடன் என்பது வழங்கப்பட்டு வருகிறது சேதமடைந்த தொழில் நிறுவனங்கள் இயந்திரங்கள் உள்ளிட்டவைகள் குறித்த தகவல்களை தெரிவிப்பது மூலம் அதற்குரிய கடன்கள் வழங்குவதற்கு மாவட்ட தொழில் மையம் சார்பில் பரிந்துரை செய்யப்பட்டு வங்கிகள் கடன் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த முகாமில் ஏராளமான சிறு வணிகர்கள் கலந்து கொண்டனர்

Tags

Next Story