80 ரூபாயில் ராமேஸ்வரத்தை சுற்றிப் பார்க்க சிறப்பு பஸ்

ராமேஸ்வரத்திலுள்ள சுற்றுலாத்தலங்களை ரூ. 80ல் சுற்றி பார்க்க சிறப்பு அரசு பஸ்களை போக்குவரத்துத் துறை அறிமுகப்படுத்தி உள்ளது.

ராமேஸ்வரத்திலுள்ள சுற்றுலாத்தலங்களை ரூ. 80ல் சுற்றி பார்க்க சிறப்பு அரசு பஸ்களை போக்குவரத்துத் துறை அறிமுகப்படுத்தி உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்திற்கு நாள்தோறும் வெளி மாவட்டம் வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் வருகை தருவது வழக்கமாக உள்ளது இந்நிலையில் வரக்கூடிய சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் ராமநாத சுவாமி திருக்கோவிலில் தரிசனத்தை முடித்துவிட்டு அதன் பின் பல்வேறு இடங்களை சுற்றிப் பார்ப்பதற்கு சௌகரியமாக இருப்பதற்காக சுற்றுலாப் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு சார்பில் சுற்றுலா பேருந்துகள் ராமேஸ்வரம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட உள்ளதாகவும் அதில் வெறும் 80 ரூபாய் மட்டும் கட்டணம் செலுத்தினால் போதும்.

இந்த பேருந்துகள் அக்னி தீர்த்த கடற்கரை ராமர் தீர்த்தம் சீதா தீர்த்தம் லக்ஷ்மண தீர்த்தம் ராமர் பாதம் கலாம் இல்லம் கலாம் தேசிய நினைவுகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சுற்றி பார்க்க ஏதுவாக இயக்கப்பட உள்ளதாகவும் ஒரு முறை என்பது ரூபாய் பயனாட்டை எடுத்தால் போதும் இந்த சிறப்பு பேருந்துகள் எங்கெங்கே வருகிறதோ அங்கெல்லாம் இந்த பயண அட்டையை பயன்படுத்தி காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பயணித்துக் கொள்ளலாம் என ராமேஸ்வரம் போக்குவரத்து கிளை மேலாளர் தகவல்

Tags

Next Story