குற்றாலத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம் - சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

குற்றாலத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம் - சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

சிறப்பு பேருந்துகள் இயக்கம் 

குற்றாலத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தென்காசி மாவட்டம் தென்காசி அருகில் உள்ள குற்றாலத்தில் தற்போது சீசன் களைகட்டியுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக தென்காசி அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் தென்காசியில் இருந்து குற்றாலம் பழைய குற்றாலம், ஐந்தருவி சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதனைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு போக்குவரத்து அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். இதனால் குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story