இன்று முதல் 5 நாள்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

இன்று முதல் 5 நாள்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

 கும்பகோணம் கோட்டம் சார்பில் தொடர் விடுமுறை காரணமாக இன்று முதல் 5 நாள்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

கும்பகோணம் கோட்டம் சார்பில் தொடர் விடுமுறை காரணமாக இன்று முதல் 5 நாள்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் கும்பகோணம் கோட்டம் சார்பில் வெள்ளிக்கிழமை (டிச.29) முதல் 5 நாள்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இதுகுறித்து போக்குவரத் துக் கழகத்தின் கும்பகோணம் கோட்ட மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் தெரிவித்தது: சனி, ஞாயிறு, ஆங்கிலப் புத்தாண்டு என தொடர்ந்து 3 நாள்கள் விடுமுறைகள் வருவதால், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் கும்பகோணம் கோட்டம் சார்பில் பொதுமக்களின் வசதிக்காக, சென்னை, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர், மதுரை, திருச்சி ஆகிய இடங் களிலிருந்து வேளாங்கண்ணி மற்றும் அனைத்து ஊர்களுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மீண்டும் பயணிகள் தங்களது ஊர்களுக்கு திரும்ப செல்ல திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, இராமநாதபுரம் ஆகிய ஊர்களிலிருந்து சென்னைக்கும், கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, கரூர், புதுக்கோட்டை, காரைக்குடி, இராமநாதபுரம் ஆகிய ஊர்களிலிருந்து கோவை, மதுரை, திருப்பூருக்கும், தஞ்சாவூர், வேளாங்கண்ணி, புதுக்கோட்டை, காரைக்குடி ஆகிய ஊர்களிலிருந்து திருச்சிக்கும் ஜனவரி 1, 2 ஆம் தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். விடுமுறை முடிந்து பயணிகள் திரும்பச் செல்ல டிசம்பர் 1, 2 ஆம் தேதிகளில் திருச்சியிலிருந்து சென்னைக்கு நள்ளிரவு 1 மணி வரையிலும், பெரம்பலூர், ஜெயங்கொண்டம், அரியலூரிலிருந்து சென்னைக்கு நள்ளிரவு 12 மணி வரையிலும், புதுக்கோட்டை நாகப்பட்டினம், திருத்துறைப் பூண்டி, வேதாரண்யம், திருவாரூர், மயிலாடுதுறை, வேளாங்கண்ணி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக் கோட்டை ஆகிய இடங்களிலிருந்து சென்னைக்கு நள்ளிரவு 12 மணி வரையிலும், காரைக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய இடங்களிலிருந்து சென்னைக்கு இரவு 10 மணி வரையிலும் பயணிகள் பயன்பாட்டுக்கு ஏற்ப சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயணிகள் முன்னதாகவே www.tnstc.in என்ற இணைய முகவரியில் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது. அதற்கேற்ப கூடுதலாக் பேருந்துகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story