அரிமளத்தில் சிறப்பு முகாம்!

அரிமளத்தில் சிறப்பு முகாம்!

சிறப்பு முகாம்!

நிகழ்வுகள்
திருமயம் அரிமளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஊனத்தடுப்பு சிறப்பு முகாம் நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் பழனிவேல் ராஜா தலைமை வகித்தார். டாக்டர் அபிராமி முன்னிலை வகித்தார். மருத்துவம் சாரா பணி மேற்பார்வையாளர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார். தொழுநோயால் பாதிக்கப்பட்ட 100 பேர் பங்கேற்றனர். 25 பேருக்கு காலனி, செயற்கை உபகரணங்களை துணை இயக்குனர் சிவகாமி வழங்கி பேசுகையில் தொழுநோய் அறிகுறி தெரிந்தவுடன் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அரசு மருத்துவமனைக்கு சென்று இலவசமாக பரிசோதனை செய்து கொள்ளலாம். ஆரம்பத்திலேயே இதற்கு சிகிச்சை பெற்றால் நோய் முழுமையாக குணப்படுத்தலாம் என்றார் நல கல்வியாளர் ராஜசேகர பாண்டியன், கண் மருத்துவர் உதவியாளர் புவனேஸ்வரி ஆகியோர் பேசினர் சுகாதார ஆய்வாளர் லாரன்ஸ் நன்றி கூறினார்.

Tags

Next Story