சிறப்பு முகாம்
நெல்லை மாநகர திமுக சார்பில் நாளை மறுதினம் சிறப்பு முகாம் நடக்கிறது.
நெல்லை மாநகர திமுக சார்பில் நாளை சிறப்பு முகாம் நடக்கிறது.
திருநெல்வேலியில் மழையால் சேதமடைந்த அரசு சான்றிதழ்களுக்கு மாற்றாக புதிய சான்றிதழ்களை பெற, திருநெல்வேலி மாநகர திமுக சார்பில் சிறப்பு முகாம்கள் வருகின்ற 29ஆம் தேதி முதல் நடைபெற உள்ளன.
இம் முகாம்களில் உணவு பாதுகாப்பு தரச்சான்றிதழ், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, ஜாதி சான்றிதழ், ஆதரவற்ற விதவை சான்றிதழ், தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை, முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டை உள்ளிட்டவற்றிற்கு விண்ணப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட கைப்பேசியுடன் முகாம்களில் பங்கேற்க வேண்டும் என நெல்லை மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன் அறிக்கை மூலம் கூறியுள்ளார்.
Next Story