திருப்பத்தூரில் பட்டா வழங்க சிறப்பு முகாம்

திருப்பத்தூர் சிறப்பு பட்ட வழங்கும் முகாம் நடைபெற்றது!

திருப்பத்தூர் அடுத்த ஆதியூர் தனியார் திருமண மண்டபத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு பட்டா வழங்கும் முகாம்- திரளாக பொதுமக்கள் பங்கேற்பு திருப்பத்தூர் மாவட்டம், ஆதியூர் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழகத்தின் முன்னால் முதல்வர் டாக்டர்.கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருப்பத்தூர் வருவாய் கோட்டம் மற்றும் வாணியம்பாடி வருவாய் கோட்டத்திற்கான சிறப்பு பட்டா வழங்கும் முகாம் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைப்பெற்றது.

இந்த முகாமில் சுமார் 1000 க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர் இந்த முகாமில் விவசாயிகள் பட்ட திருத்தம். பட்டா மாற்றம். பட்ட பெயர் மாற்றம். நிலத்து பட்டா.வீட்டு பட்டா.உள்ளிட்டவைகளை பெயர்மாற்றம்.திருத்தம் செய்ய இரண்டு தாலுக்காவில் நாட்ரம்பள்ளி தாலுக்கா. திருப்பத்தூர். தாலுக்கா உட்பட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள் பொது மக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மணுகொடுத்தனர்.

முகாமில் பட்ட சிறப்பு அழைப்பாளராக ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜி, மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, திருப்பத்தூர் வருவாய் கோட்டாட்சியர் பானு, வட்டாட்சியர் சிவப்பிரகாசம் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். மாவட்ட ஆட்சியர் பேசுகையில் முதல்வர் உத்தரவின் பேரில் பல்வேறு துறைகளின் மூலம் மனுக்கள் பெற்று வருகிறோம். அதில் சில பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடிவதில்லை.

அதை ஆய்வு செய்வதற்காக குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. சில பிரச்சனைகள் நீதிமன்ற மூலம் தான் தீர்க்கப்பட முடியும். பல்வேறு சான்றிதழ்களை இ சேவை மூலம் பெற்றுக்கொள்ளலாம். உயிர்காக்கும் மருத்துவ சிகிச்சை பெற முடியும், பயிர்காப்பீடு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்படுகிறவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படுகிறது. மாற்று திறனாளிகளுக்கு வங்கி மூலம் கடன் வழங்கப்பட இருக்கிறது என்றார். இறுதியில் வட்டாட்சியர் சிவப்பிரகாசம் நன்றி கூறினார்.

Tags

Next Story