கொளக்குடி ஊராட்சியில் மண் மாதிரிகள் சேகரித்தல் சிறப்பு முகாம்          

கொளக்குடி ஊராட்சியில் மண் மாதிரிகள் சேகரித்தல் சிறப்பு முகாம்           
மண் மாதிரி சோதனை
கொளக்குடி ஊராட்சியில் மண் மாதிரிகள் சேகரித்தல் சிறப்பு முகாம் நடைபெற்றது.          

தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் வட்டாரம் வேளாண்மைத்துறையின் மூலம், கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் கீழ் வேளாண் உதவி இயக்குநர் சாந்தி தலைமையில், மண் மாதிரிகள் சேகரித்தல் முகாம் கொளக்குடி கிராமத்தில் நடைபெற்றது.

முன்னதாக மண் மாதிரி எடுக்கும் வழிமுறைகளை வேளாண் உதவி இயக்குநர் சாந்தி எடுத்துரைத்தார். அப்போது அவர் பேசுகையில், "மண் மாதிரி எடுக்கும் முறைகள், மண்ணின் தன்மை, மண்ணிற்கு தேவையான ஊட்டச்சத்துகள், ரசாயன உரங்கள் நிலத்தின் தேவைக்கு ஏற்ப பயன்படுத்தும் முறைகள் போன்றவைகளை மண் மாதிரி முடிவின் மூலம் அறிந்து பயிர் சாகுபடி செய்யும் பொழுது அதிக அளவில் ரசாயன உரங்கள் இடுவதும் குறைக்கப்படுகிறது.

இதனால் மண்ணின் தன்மையும் பாதுகாக்கப்பட்டு, பயிருக்கு தேவையான சத்துகள் கிடைப்பதனால் விவசாயிகளுக்கு பொருள் சேதம் குறைந்து மகசூல் அதிகரித்து லாபம் அடைகிறார்கள். எனவே விவசாயிகள் இந்த ஆண்டு 2024-2025-க்கான கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட கிராமங்களான சோலைக்காடு, விளங்குளம்,

ருத்திரசிந்தாமணி, கொளக்குடி, மணக்காடு, புக்கரம்பை, கட்டையங்காடு உக்கடை ஆகிய கிராமங்களில், மண் மாதிரிகள் வேளாண்மைத் துறையின் மூலமாக எடுக்கப்பட உள்ளது. ஆகவே கிராம விவசாயிகள் அனைவரும் தங்களது பகுதி உதவி வேளாண் அலுவலர்களை தொடர்பு கொண்டு மண் மாதிரி எடுத்து பயன்பெறலாம்" என்றார். மண் மாதிரி செயல் விளக்கத்தினை வேளாண் துணை அலுவலர் து.சிவசுப்ரமணியன், வேளாண் உதவி அலுவலர் அ.நிவாசன் ஆகியோர் விவசாயிகளுக்கு செய்து காண்பித்தனர். இதில் திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story