முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டப் பயனாளிகள் பதிவு செய்யும் சிறப்பு முகாம்

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டப் பயனாளிகள் பதிவு செய்யும் சிறப்பு முகாம்

மருத்துவ காப்பீட்டு முகாம்

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டப் பயனாளிகள் பதிவு செய்யும் சிறப்பு முகாம்

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டப் பயனாளிகள் பதிவு செய்யும் சிறப்பு முகாம் திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம் வேங்கிக்கால் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டப் பயனாளிகள் பதிவு செய்யும் சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ், நேற்று குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். இம்முகாம் தமிழ் நாடு முழுவதும் 100 காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்யும் முகாம் நடைபெற்று வருகிறது

அதில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 3 முகாம் நடைபெற்று வருகின்றது .வேங்கிக்கால் ஊராட்சி மன்ற அலுவலகம், கலசப்பாக்கம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், கீழ்பென்னாத்தூர் தொகுதியில் அரசு ஆரம்ப பள்ளி ஆகிய இடங்களில் பதிவு செய்யும் முகாம் நடைபெற்று வருகிறது. மேலும் இதுவரை திருவண்ணாமலை மாவட்டத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் 21,12,996 பயன் பெற்றுள்ளனர்.

நேற்று நடைபெற்ற முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட முகாமில் 5 பயனாளிகளுக்கு காப்பீட்டு அட்டையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். இம்முகாமில் இதுவரை முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்யாத பயனாளிகள் தங்களது குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டையுடன் வந்து பதிவு செய்து கொண்டு பயனடையலாம் மேலும் இம்முகாமில் பதிவு செய்ய தவறியவர்கள் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் பதிவு மையத்தில் வந்து பதிவு செய்து கொள்ளலாம்.

இந்நிகழ்ச்சியில் தமிழ் நாடு சுகாதார திட்டத்தின் மருத்துவ அலுவலர் மரு. சஹானா, வேங்கிக்கால் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி தமிழ்செல்வன், மாவட்ட திட்ட அலுவலர் ஞானம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தேவராஜ், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story