மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம்

மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம்
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் 18 இடங்களில் நடக்கிறது.

தமிழ்நாடு அரசு சார்பில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொலைதூரங்களில் இருந்து அடையாள அட்டை பெற வருபவர்களின் சிரமத்தை குறைக்க குறுவட்ட வாரியாக 18 இடங்களில் முகாம் நடைபெற உள்ளது. அதன்படி பாராஞ்சி குறுவட்டத்திற்கு வருகிற 11-ந் தேதி என்.எல்.பி. திருமண மண்டபத்திலும், பள்ளூருக்கு 12-ந் தேதி பள்ளூர் அரசு உயர்நிலைப்பள்ளியிலும், அரக்கோணம் தெற்கு மற்றும் வடக்கு ஆகிய பகுதிகளுக்கு 13-ந் தேதி அரக்கோணம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், ராணிப்பேட்டை பகுதிக்கு 18-ந் தேதி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கிலும் நடைபெறும்.

வாலாஜா பகுதிக்கு 20-ந் தேதி வாலாஜா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், விஷாரம் பகுதிகளுக்கு 21-ந் தேதி இஸ்லாமியா ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், சோளிங்கர் குறுவட்டத்திற்கு 27-ந் தேதி சோளிங்கர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. ஆற்காடு பகுதிக்கு அடுத்த மாதம் 2-ந் தேதி ஆற்காடு அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், திமிரிக்கு 4-ந் தேதி திமிரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், கலவைக்கு 5-ந் தேதி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், காவேரிப்பாக்கத்திற்கு அடுத்த மாதம் 18-ந் தேதி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் நடைபெறுகிறது என கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

Tags

Next Story