தஞ்சாவூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்புமுகாம்

தஞ்சாவூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்புமுகாம்


தஞ்சாவூர் மாவட்டத்தில் பிப். 13, 20, 27-இல் மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்க சிறப்பு முகாம் நடக்கிறது


தஞ்சாவூர் மாவட்டத்தில் பிப். 13, 20, 27-இல் மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்க சிறப்பு முகாம் நடக்கிறது

தஞ்சாவூர் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம், பிப்ரவரி 13, 20, 27- ஆம் தேதிகளில் நடை பெறவுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெறாதவர்களுக்காக தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டையில் கோட்ட அளவில் சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளது.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்திலுள்ள மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில், இன்று (பிப்ரவரி 13 ஆம் தேதி) செவ்வாய்க்கிழமையும், கும்பகோணம் பேருந்து நிலையம் அருகேயுள்ள கே.எம்.எஸ். எஸ். வளாகத்தில் பிப்ரவரி 20 - ஆம் தேதி செவ்வாய்க்கிழமையும், பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் எதிரேயுள்ள கிராம சேவை கட்டடத்தில் பிப்ரவரி 27 ஆம் தேதி செவ்வாய்க்கிழமையும் இம்முகாம் நடைபெறவுள்ளது.

இதில் எலும்பு முறிவு மருத்துவர், காது, மூக்கு, தொண்டை பிரிவு மருத்துவர், மன நல மருத்துவர், கண் மருத்துவர் ஆகிய அரசு மருத்துவர்கள் கலந்து கொண்டு, மாற்றுத் திறனாளிகளைப் பரிசோதனை செய்து மருத்துவச் சான்று வழங்கவுள்ளனர். இச்சான்றிதழின் அடிப்படையில் மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது.

மாவட்டத்தில் இதுவரை அடையாள அட்டை பெறாத மாற்றுத் திறனாளிகள் மட்டும் குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் 6 புகைப்படங்கள், இதற்கு முன் சிகிச்சை பெற்ற ஆவணங்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம். இதுவரை தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்காத மாற்றுத்திறனாளிகள், இம்முகாமில் ஆவணங்களுடன் மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை நகலுடன் வந்து விண்ணப்பித்து பயன்பெறலாம்" எனத் தெரிவித்துள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story