திருநங்கைகள், திருநம்பிகளுக்கு அடையாள அட்டை வழங்க சிறப்பு முகாம்

திருநங்கைகள், திருநம்பிகளுக்கு அடையாள அட்டை வழங்க சிறப்பு முகாம்

மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா

ஈரோடு மாவட்டத்தில் வசித்து வரும் திருநங்கைகள் மற்றும் திருநம்பிகளுக்கு அடையாள அட்டை வழங்கிட சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் வசித்து வரும் திருநங்கைகள் மற்றும் திருநம்பிகளுக்கு உதவிடும் பொருட்டு இதர நலத்திட்ட உதவிகள் வழங்கும் துறைகளுடன் ஒருங்கிணைந்து அடையான அட்டை வழங்குதல், ஆதார் அட்டையில் திருத்தம், வாக்காளர் அடையாள அட்டை, முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை மற்றும் ஆயுஷ்மான் பாரத் அட்டை ஆகியவற்றினை விடுபட்டவர்களுக்கு வழங்கிட சிறப்பு முகாம் மாவட்ட தலைநகரங்களில் நடத்திட தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் சம்மந்தப்பட்ட துறைகளை ஒருங்கிணைத்து 21.06.2024 காலை 9.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் வளாகம், தரைத்தளம் மக்கள் குறைதீர்க்கும் கூட்ட அரங்கில் நடக்கவிருக்கும் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு தங்களின் விவரத்தினை பதிவு செய்து பயன் பெற்று கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story