திருநங்கையருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க சிறப்பு முகாம்

திருநங்கையருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க சிறப்பு முகாம்

தஞ்சாவூரில் ஜூன்21ம் தேதி திருநங்கையருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.


தஞ்சாவூரில் ஜூன்21ம் தேதி திருநங்கையருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், மாவட்ட சமூக நல அலுவலகம், திருநங்கைககளுக்கு முழுமையான சமூக பாதுகாப்பையும், சமூக அங்கீகாரத்ததை அளித்து, அவர்களையும் சமூகத்தின் ஓர் அங்கமாக ஏற்றுக் கொள்ளும் பொருட்டு இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு அரசின் மூலம் திருநங்கைகள் நல வாரியம் 2008 இல் அமைக்கப்பட்டது. திருநங்கைகளின் கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்வதற்காக திருநங்கைகள் நல வாரியத்தின் மூலம் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனைத்தொடர்ந்து திருநங்கையருக்கு ஒரே இடத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க ஏதுவாக, பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து 21.06.2024 அன்று மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இம்முகாமில், அடையாள அட்டை வழங்குதல், ஆதார் அட்டையில் திருத்தம், வாக்காளர் அட்டை, முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டம், ஆயுஷ்மான பாரத் அட்டை பெற்று வழங்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. மேலும் இதற்கான விபரங்களை அறை எண்.303, 3-வது தளம், மாவட்ட சமூக நல அலுவலகம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம். தஞ்சாவூர் என்ற முகவரியில் பெற்றுக்கொள்ளலாம் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story