பாரதப் பிரதமரின் சூரிய வீடு இலவச திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம்
பைல் படம்
திருவண்ணாமலையில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் மானியத்துடன் கூடிய சோலார் பேனல் பொருத்தி மின்கட்டணத்தை குறைப்பதற்காக விண்ணப்ப பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மின் பகிர்மான வட்டம், செய்யாறு கோட்டத்தில் பாரதப் பிரதமரின் சூரிய வீடு இலவச திட்டத்தின் கீழ் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் மானியத்துடன் கூடிய சோலார் பேனல் பொருத்தி மின்கட்டணத்தை குறைப்பதற்காக விண்ணப்ப பதிவு செய்யும் சிறப்பு முகாம் 02.03.2024, காலை 10.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை செய்யாறு கோட்டத்தில், அந்தந்த பிரிவு அலுவலகத்தில் நடைபெற உள்ளது. எனவே பொதுமக்கள் கலந்து கொண்டு விண்ணப்பம் பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
Next Story