பெரம்பலூரில் மழை வேண்டி சிறப்பு கூட்டுத் தொழுகை
கூட்டுத் தொழுகை
பெரம்பலூர் மட்டுமல்லாது தமிழகத்தில் அதிகப்படியான வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், நிலத்தடி நீர் குறைந்துள்ளது மேலும் 106 டிகிரிக்கு மேல் வெயிலின் தாக்கம் இருந்து வருவதால், அதிக வெப்பத்தினால் மக்கள் சிரமப்பட்டு வரும் நிலையில், அத்தியாவசிய தேவையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது.
இதனை போக்கவும் வெயிலின் தாக்கத்திலிருந்து காத்துக் கொள்ளவும் மழை வேண்டி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல் மற்றும் ஜமாத்தார்கள் ஒன்றிணைந்து பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள மௌலானா மேல்நிலைப் பள்ளிவளாகத்தில் சிறப்பு கூட்டுத் தொழுகை நடைபெற்றது, இதில் திரளான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு, மழை வேண்டி சிறப்பு கூட்டு பிரார்த்தனை செய்தனர். இதில் மாவட்டத்திலுள்ள பள்ளிவாசல் ஜமாத்தார்கள் மற்றும் நிர்வாகிகள், 500க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.