அரசு கல்லூரியில் சிறப்பு கலந்தாய்வு
தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில்2024 - 2025ஆம் ஆண்டிற்கான இளநிலை பட்டப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்காக 14,928 விண்ணப்பங்கள் பெறப்பட்டு இருந்தன. இதையடுத்து மாற்றுத்திறனாளி மாணவர்கள், முன்னாள் படை வீரர்களின் மாணவர்கள், அந்தமான் நிகோபாரை சேர்ந்த மாணவர்கள், தேசிய மாணவர் படை மாணவர்கள், பாதுகாப்புப்படை வீரரின் குழந்தைகள் மற்றும் விதவை, விளையாட்டு மாணவர்கள் ஆகிய சிறப்பு பிரிவை சேர்ந்த மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு 29 ம் தேதி தொடங்கியது.
இதில், என்சிசி, முன்னாள் படை வீரர்களின் குழந்தைகள், மாற்றுதிறனாளிகள், ஸ்போர்ட்ஸ் ஆகிய பிரிவுகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். முதல் நாள் நடந்த கலந்தாய்வில், 47 பெருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதே போல் 2வது நேற்று நடந்த கலந்தாய்விற்கு முதல்வர் கண்ணன் தலைமை வகித்தார். மாணவர்களின் விண்ணப்பப் படிவம், பள்ளி மாற்றுச்சான்றிதழ், பிளஸ்1 மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல், சாதிச்சான்றிதழ் ஆகியவை சரிபார்க்கப்பட்டது. 2வது நாளில் 3 பேருக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. சிறப்பு பிரிவினருக்காக நடந்த கலந்தாய்வில் மொத்தம் 50 மாணவ, மாணவிகளுக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. கலந்தாய்வு பணியில் பேராசிரியர்கள், பேராசிரியைகள் கலந்து கொண்டனர்.