நண்பரின் சகோதரருக்கு பாலியல் தொல்லை; வாலிபருக்கு ஆயுள் தண்டனை!!

நண்பரின் சகோதரருக்கு பாலியல் தொல்லை; வாலிபருக்கு ஆயுள் தண்டனை!!

கைது

நண்பரின் சகோதரருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு ஆயுள் தண்டனையும், உடந்தையான சகோதரனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ராயப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 35 வயது வாலிபர், 23 வயதான தனது நண்பருடன் வீட்டின் மாடியில் படுத்து தூங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார். இவர்கள், இருவரும் போதைக்கு அடிமையானவர்கள் என்று கூறப்படுகிறது. கடந்த 2021ம் ஆண்டு இவர்கள் மாடியில் தூங்கி கொண்டிருந்த போது அவர்களுடன் 23 வயது வாலிபரின் சகோதரரான இளைஞரும் ஒன்றாக படுத்திருந்தார். அப்போது 35 வயது வாலிபர், அந்த வாலிபருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். மேலும், இதை வெளியில் சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டி உள்ளார். இதுகுறித்து அந்த நபர் ஒன்றாக படுத்திருந்த தனது சகோதரரிடம் தெரிவித்த போதும் அவர் கண்டுகொள்ளவில்லையாம். மாறாக அவரும், பாலியல் தொந்தரவு கொடுத்து மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கு சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எம்.ராஜலட்சுமி முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, 35 வயதான வாலிபருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் அபராதமும், குற்றச்செயலில் ஈடுபட்ட மற்றொருவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Tags

Next Story