சாய்பாபா கோவிலில் சிறப்பு பகல் அலங்கார ஆராதனை

சாய்பாபா கோவிலில் சிறப்பு பகல் அலங்கார ஆராதனை

பகல் அலங்காரம்

சிவகங்கை மாவட்டம், மேலவாணியங்குடி சாய்பாபா கோவிலில் நடைபெற்ற சிறப்பு பகல் அலங்கார ஆராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

சிவகங்கை மாவட்டம், மேலவாணியங்குடி கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ சீரடி சாய்பாபா திருக்கோவிலில் சிறப்பு பகல் அலங்கார ஆராதனைகள் நடைபெற்றன. முன்னதாக சாய்பாபாவுக்கு புதுப்பட்டு வஸ்திரம் அணிவித்து வண்ண மலர் மாலைகள் கொண்டு சிறப்பாக அலங்கரித்தனர். தொடர்ந்து பாபாவுக்கு தீப, தூப ஆராதனை காண்பித்து உதிரிப்பூக்களை கொண்டு அர்ச்சனைகள் செய்யப்பட்டன.

பின்னர் விநாயகப் பெருமானுக்கு பூஜை நடத்தி தீப ஆராதனை காண்பித்து, சாய்பாபாவுக்கு ஒரு முகம், மூன்று முகம் மற்றும் ஐந்து முகம் கொண்ட தீப ஆராதனைகள் காண்பிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து உப சேவைகள் செய்து நெய்வேத்தியம் நடந்தன. நிறைவாக சாய்பாபாவுக்கு ஏக முக தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ சாய் பாபாவை வழிபட்டனர்.

Tags

Next Story