கூட்டுறவுத்துறை சார்பில் நாளை சிறப்பு கடன் தீர்வு திட்ட முகாம்
கடன் மேளா
சேலம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, கூட்டுறவு சங்கங்களில் வசூலாகாமல் நிலுவையில் உள்ள தவணை தவறிய பண்ணை சாராக்கடன்கள் மற்றும் இதர காலக்கடன்களை தீர்வு செய்ய சிறப்பு கடன் தீர்வு திட்டம் செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பை சட்டசபையில் அமைச்சர் வெளியிட்டார். அதன்படி நாளை (சனிக்கிழமை) சிறப்பு கடன் தீர்வு திட்ட முகாம் நடக்கிறது.
சேலம் மாவட்டத்தில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், நகர கூட்டுறவு வங்கிகள், தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள் ஆகிய கூட்டுறவு சங்கங்கங்களின் அலுவலக வளாகத்தில் இந்த முகாம் நடக்கிறது. எனவே கூட்டுறவு சங்கங்களில் கடன் பெற்று திருப்பி செலுத்தாமல் நீண்ட காலமாக கடன் நிலுவை வைத்துள்ள கடன்தாரர்கள் முகாமில் கலந்து கொண்டு பயன் அடையலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.