பகவதி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்

காமாட்சி அலங்காரத்தில் பகவதி அம்மன்

மண்ணச்சநல்லூர் பகவதி அம்மன் திருக்கோயிலில் 123 ம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு " காமாட்சி அம்மன் அலங்காரம்" செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் கடைவீதியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த திருக்கோயிலில் 123ம் ஆண்டு திருவிழா கடந்த டிசம்பர்.28ம் தேதி கம்பம் நடுதலுடன் விழா தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் ஒவ்வொரு நாளும் அம்மன் பல்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். இந்நிலையில். ஆறாம் நாள் விழாவில் பகவதி அம்மனுக்கு " காமாட்சி அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அபிஷேக தீபாரதனை மற்றும் " ஊஞ்சல் உற்சவமும் நடைபெற்றது. இவ்விழாவில் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஒம் சக்தி பராசக்தி பக்தி என துதி பாடி தரிசனம் செய்தனர்.
Next Story


