உஜ்ஜையினி மாகாளியம்மன் சிறப்பு அலங்காரம்

உஜ்ஜையினி மாகாளியம்மன் சிறப்பு அலங்காரம்

சிறப்பு அலங்காரம்

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே மாகாளிக்குடியில் அமைந்துள்ள அருள்மிகு உஜ்ஜையினி மாகாளியம்மன் சித்ரா பௌணர்மியை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே மாகாளிக்குடியில் அமைந்துள்ளது சமயபுரம் மாரியம்மன் கோவிலின் உப கோயிலான அருள்மிகு உஜ்ஜையினி மாகாளியம்மன் கோயில். தமிழ் மாதங்களில் முதல் மாதமான சித்திரை மாதத்தில் வரும் பௌணர்மியை சித்ரா பௌணர்மியாக வழிபடுகிறோம். இந்த நாளில் சிவ வழிபாட்டினை மேற்கொள்வது மிகவும் சிறப்பானதாகும். சித்ரா பௌணர்மியில் வழிபாடு செய்வதால் மனக்கவலைகள் அனைத்தும் நீங்கி விடும் என்பது பக்தர்களின் ஐதீகம்.இந்நிலையில் சித்ரா பௌணர்மியை முன்னிட்டு அருள்மிகு உஜ்ஜையினி மாகாளியம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடைப்பெற்றது.தொடர்ந்து பால், தயிர், திருமஞ்சனம், இளநீர், பஞ்சாமிர்தம்,பன்னீர்,தேன்,திரவியப்பொடி உள்ளிட்ட வசையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து உலக மக்கள் நலன் வேண்டியும் பூஜைகள் நடைப்பெற்றது. இதில் ஏராளமான பக் தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை சமயபுரம் கோயில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் கோயில் பணியாளர்கள், கோயில் குருக்கள்கள், பக்தர்கள், கிராம மக்கள் செய்திருந்தனர்.

Tags

Next Story