சிவகங்கையில் கல்விக்கடன் சிறப்பு முகாம்

சிவகங்கையில் கல்விக்கடன் சிறப்பு முகாம்

மாவட்ட ஆட்சியர் 

சிவகங்கை மருதுபாண்டியர் பள்ளியில் பிப்ரவரி 15ஆம் தேதி கல்விக்கடன் முகாம் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து வங்கிகளின் சார்பில், கல்லூரி மாணவர்களுக்கான சிறப்பு கல்வி கடன் முகாம் பிப்.15 அன்று நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஆஷாஅஜித் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

சிவகங்கை மாவட்டத்தில் கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில், அனைத்து வங்கிகளின் சார்பில் சிறப்பு கல்வி கடன் முகாம், சிவகங்கை மருதுபாண்டியர் பள்ளி கலையரங்கில் பிப்.15 அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

எனவே, கல்விக்கடன் பெற விரும்பும் மாணவ மாணவிகள் அனைவரும் www.vidyalakshmi.co.in என்ற இணையத்தளத்தில் தங்களுடைய விண்ணப்பத்தை தேவைப்படும் ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்ய வேண்டும். பின்னர், முகாம் நடைபெறும் நாளன்று விண்ணப்ப நகல் மற்றும் ஆவணங்களுடன் கலந்து கொள்ளலாம்.

பெற்றோரின் இரண்டு புதிய புகைப்படம், வங்கி பாஸ் (இணைப்பு கணக்கு) புத்தக நகல், இருப்பிடம், வருமானம் மற்றும் சாதி சான்று, பான் கார்டு, ஆதார் அட்டை நகல், கல்லூரியிலிருந்து பெறப்பட்ட உண்மை சான்றிதழ் மற்றும் கல்விக்கட்டண விவரம், 10 மற்றும் 12ம் வகுப்பு மற்றும் இளநிலை பட்டப்படிப்பின் மதிப்பெண் சான்றிதழ்கள், முதல் பட்டதாரியாக இருப்பின் அதற்கான சான்று மற்றும் கலந்தாய்வு மூலமாக பெறப்பட்ட சேர்க்கை ஆணை உள்ளிட்ட ஆவணங்களுடன் கலந்து கொள்ள வேண்டும்.

இம்முகாமில் கலந்து கொண்டு மாணவ, மாணவியர் பயன்பெறலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story