1008 எலுமிச்சை மாலை அலங்காரத்தில் நாமக்கல் ஆஞ்சநேயர்
எலுமிச்சை மாலை சாற்றப்பட்ட ஆஞ்சிநேயர்
நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயா் கோயில் அமைந்துள்ளது. இங்கு விசேஷ நாள்களில் ஆஞ்சநேயருக்கு தங்க கவசம், வெள்ளி கவசம், முத்தங்கி அலங்காரம், புஷ்ப அலங்காரம், வடை மாலை, வெற்றிலை மாலை, எலுமிச்சை மாலை உள்ளிட்ட பல்வேறு அலங்காரங்கள் செய்யப்படும். இன்று தை மாதம் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு 1008 எலுமிச்சை மாலை சாற்றப்பட்டு மகா தீபாராதனை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஆஞ்சநேயரை தரிசித்தனர். எலுமிச்சை மாலை சாற்றப்படுவதால் கிடைக்கும் பலன்கள், அனுமனின் வாலில் நவக்கிரகங்கள் ஐக்கியமாகி உள்ளன. அதனால் நவக்கிரக தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அவரை வழிபட்டால் பலன் கிடைக்கும். மேலும்,திருஷ்டி தோஷம் மற்றும் எதிரிகளினால் தீங்கு நேராதிருக்கும். மாதந்தோறும் மூலநட்சத்திரத்திலும், அமாவாசை திதியிலும் வழிபட்டு பலன் பெறலாம். வெற்றிலைமாலை, துளசி மாலை, வடைமாலை, எலுமிச்சை மாலை ஆகியன சாற்றி வழிபட்டால் நம் துன்பங்கள் பனிபோல் விலகும் என்பது ஐதீகம்.