திருநெல்வேலியில் சிறப்பு காய்ச்சல் தடுப்பு முகாம்
மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன்
திருநெல்வேலி மாவட்டத்தில் நாளை சிறப்பு காய்ச்சல் தடுப்பு முகாம் நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்தார்.
நெல்லையில் பெய்து வரும் தொடர் மழையால் பொதுமக்கள் காய்ச்சல் மற்றும் சளியால் அவதி அடைந்து வருகின்றனர். இதனை கட்டுப்படுத்துவதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் திருநெல்வேலி,அம்பை, சேரன்மகாதேவி, களக்காடு,பாளை,மானுர், நாங்குநேரி,பாப்பாக்குடி, ராதாபுரம்,வள்ளியூர் உள்ளிட்ட வட்டார பகுதிகளில் நாளை 10/01/24 சிறப்பு காய்ச்சல் தடுப்பு முகாம் நடைபெறும் என ஆட்சியர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார்.
Next Story