கஞ்சா கடத்தியவரை கைது செய்த தனிப்படை - 8 கிலோ பறிமுதல்

ஆந்திராவிலிருந்து கஞ்சா கடத்தி வந்தவரை கைது செய்த தனிப்படை போலீசார் அவரிடமிருந்து 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

தேனி மாவட்டம் தேவாரத்தில் போடி உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர் பெரியசாமி தலைமையிலான தனிப்படை போலீசார் தேவாரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் பெரிய கைப்பை உடன் வந்த அதே பகுதியை சேர்ந்த செந்தில் எனும் நபரை பிடித்து சோதனை செய்ததில் அவர் கொண்டு வந்த கைப்பையில் 8 கிலோ கஞ்சா இருந்ததை கண்டுபிடித்த தனிப்படை போலீசார் உடனடியாக தேவாரம் காவல் நிலையத்தில் அவரை ஒப்படைத்தனர்.

இதை அடுத்து தேவாரம் போலீசார் மேற்கொண்ட முதல் கட்ட விசாரணையில் ஆந்திராவில் இருந்து சில்லறை விற்பனை செய்வதற்காக கஞ்சா வாங்கி வரப்பட்டது தெரிய வந்ததை அடுத்து செந்திலை கைது செய்த போலீசார் மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்ற நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கஞ்சாவை ஒழிக்க தமிழக அரசு கடும் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ள நிலையில் ஆந்திராவிலிருந்து கஞ்சா தேனி மாவட்டத்திற்கு வருவதை அறிந்த தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் உத்தரவின் பேரில் 5 தனி படைகள் அமைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுள்ள மற்ற நபர்கள் குறித்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

Tags

Next Story