அரசின் சிறப்பு  புகைப்பட கண்காட்சி: அமைச்சர் திறந்து வைப்பு

அரசின் சிறப்பு  புகைப்பட கண்காட்சி: அமைச்சர் திறந்து வைப்பு
வடசேரியில் அரசின் புகைப்பட கண்காட்சியை துவக்கி வைத்த அமைச்சர்
வடசேரியில் அரசின் சிறப்பு  புகைப்பட கண்காட்சியை அமைச்சர் திறந்து வைத்தார்.

கன்னியாகுமரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் வடசேரி பேருந்து நிலையத்தில் இன்று (09.03.2024) தமிழ்நாடு முதலமைச்சர் சாதனைகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என். ஸ்ரீதர் தலைமை வகித்தார்.

நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் முன்னிலை வகித்தார். பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கண்காட்சியினை திறந்து வைத்து கூறுகையில், - தமிழ்நாடு அரசால் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுவரும் நலத்திட்டங்கள் குறித்து அனைத்து தரப்பட்டவர்களும் அறிந்து கொள்ளும் வகையிலும், விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் பொருட்டும் இன்று முதல் தொடர்ந்து 10 நாட்கள் சிறப்பு புகைப்பட கண்காட்சி நடைபெறவுள்ளது.

இதில் அரசு திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டது. கன்னியாகுமரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பாக அமைக்கப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சியினை பொதுமக்கள் பார்வையிட்டு அரசின் திட்டங்கள் குறித்து தெரிந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். அமைச்சர் தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலக அதி நவீன மின்னணு விளம்பர வாகனத்தின் மூலம் தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க குறும்படம் திரையிடப்பட்டதை பார்வையிட்டார்கள்.

நடைபெற்ற நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பா.ஜாண் ஜெகத் பிரைட், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டார்கள்.

Tags

Next Story