சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்
சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்
முன்னாள் ராணுத்தினர் நலசங்கத்தின் உறுப்பினர்கள் பங்கேற்றனர்
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில், முன்னாள் படைவீரர்கள்,அவர்களைச் சார்ந்தோர்களுக்கு 3ம் காலாண்டிற்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் பூங்கொடி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் 46 மனுக்கள் பெறப்பட்டன. ராணுவத்திற்கு தனது மகன்களை அனுப்பிய 8 பெற்றோர்களுக்கு போர்ப்பணி ஊக்க மானிய பதக்கங்கள், ஒரு பயனாளிக்கு தட்டச்சு பயிற்சி மானியம் ரூ.5,000 உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் சுகுணா, ஓய்வு லெப்டினென்ட் கர்னல் வீரமணி, முன்னாள் ராணுவத்தினர் நல அமைப்பாளர் ஜெய்சங்கர் பங்கேற்றனர்.
Next Story