நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் படை வீரர்களுக்கு சிறப்பு காவலர் பணி
தர்மபுரி மாவட்ட ஆட்சியர்
நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணியில் முன்னாள் படை வீரர்கள் சிறப்பு காவலர்களாக பணி செய்ய விரும்புவோர் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணியில் முன்னாள் படை வீரர்கள் சிறப்பு காவலர்களாக ஈடுபடுத்தப்படுகிறார் கள். எனவே தர்மபுரி மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படை வீரர்கள் அனைவரும் தங்கள் படை விலகல் சான்று, அடையாள அட்டை, ஆதார் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றுடன் தர்மபுரி மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தை அலுவலக வேலை நாட்களில் நேரில் அணுகி தங்கள் விருப் பத்தினை விண்ணப்பமாக அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த அலுவலகத்திற்கு நேரில் வந்து செல்ல இயலாதவர்கள் அலுவலகதொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவித்து விருப்ப மனுவை வழங்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story