கோடநாடு எஸ்டேட்டில் சிறப்பு புலனாய்வு குழு ஆய்வு

கோடநாடு எஸ்டேட்டில் சிறப்பு புலனாய்வு குழு ஆய்வு

சோதனை நடந்த இடம்

கோடநாடு எஸ்டேட்டில் சி.பி.சி.ஐ.டி., எஸ்.பி., தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு நிபுணர்கள் வழக்கு தொடர்பாக சம்பவம் நடந்த இடத்தில் ஆய்வு மேற்க்கொண்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ம் ஆண்டு காவலாளி ஓம்பகதூர் கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடந்தது. இது தொடர்பாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் விபத்தில் இறந்த கனகராஜ் உட்பட கேரளாவை சேர்ந்த சயான்,வாளையார் மனோஜ் உட்பட 11 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை ஊட்டி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 23ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது இதற்கு முன்பு நடந்த விசாரணையில் எதிரிகள் தரப்பு வழக்கறிஞர் மூலம் சம்பவம் நடந்த இடத்தில் தற்போது பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், கொலை கொள்ளை சம்பவம் நடந்த இடத்தை மீண்டும் ஆய்வு செய்ய கோரி மனு அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் அரசு தரப்பு இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடைசியாக இந்த வழக்கு விசாரணைகக்கு வந்த போது அரசு தரப்பு அளித்த பதில் மனு ஏற்கப்பட்டு சிறப்பு புலனாய்வு குழு அமைத்து சம்பவம் நடந்த இடத்தில் தடையங்களை அழிக்கவோ மாற்றவோ கூடாது, முழுமையாக வீடியோ பதிவு செய்து ஆய்வு நடத்தநீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்நிலையில் இன்று சி.பி.சி.ஐ.டி., எஸ்.பி., தலைமையிலான சிறப்பு குழு மற்றும் தடயவியல் நிபுணர்கள் சம்பவம் இடத்தில் ஆய்வு மேற்க்கொண்டனர்.

இந்த ஆய்வில் சம்பவம் இடத்தில் சம்பவம் நடந்த போதும், தற்போதும் என்னென்ன மாற்றங்கள் ஏற்ப்பட்டுள்ளது என முழுமையாக ஆய்வு மேற்க் கொள்ளப்பட்டுள்ளது. நாளை நடைபெறும் விசாரணையின் போது இந்த ஆய்வு குறித்து விளக்கம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

Next Story