தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சிறப்பு சொற்பொழிவு

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சிறப்பு சொற்பொழிவு

சிறப்பு சொற்பொழிவு


தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக இலக்கியத்துறையும், திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழாய்வுத் துறையும் இணைந்து நடத்திய ‘அடிப்படைத்தமிழ் இலக்கணம்’ சிறப்புச் சொற்பொழிவு வியாழக்கிழமை தமிழ்ப் பல்கலைக்கழக பேரவைக் கூடத்தில் துணைவேந்தர் வி.திருவள்ளுவன் தலைமையில் நடைபெற்றது. இலக்கியத் துறையின் தலைவர் மற்றும் பேராசிரியர் முனைவர் ஜெ.தேவி வரவேற்றார்.

தலைமை வகித்து பேசிய துணைவேந்தர் வி.திருவள்ளுவன் "இலக்கண வகுப்பு மாணவர்களுக்கு சொற்பொழிவு முழுமையான பயனை அடைய வேண்டும்" என்றார். அவரைத் தொடர்ந்து தந்தை பெரியார் அரசு கலை (ம) அறிவியல் கல்லூரி (த) இணைப் பேராசிரியர், தலைவர் முனைவர் கா.வாசுதேவன் பல்கலைக் கழகத்தைப் புகழ்ந்தும் இலக்கண வகுப்பின் தேவையையும் கூறி வாழ்த்துரை வழங்கினார். தமிழ்ப் பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் கு.வெ.பாலசுப்பிரமணியன் ‘அடிப்படைத் தமிழ் இலக்கணம்’ எனும் பொருண்மையில் மாணவர்களுக்கு பொழிவுரை வழங்கினார்.

நிறைவாக இலக்கியத்துறை பேராசிரியர் முனைவர் பெ.இளையாப்பிள்ளை நிறைவுறையாற்றினார். பிற்பகல் அமர்வு சொற்பொழிவில் தந்தை பெரியார் அரசு கலை(ம) அறிவியல் கல்லூரி (த) இணைப்பேராசிரியர், முனைவர் கா.வாசுதேவன் வாழ்த்திப் பேசினார். இலக்கியத்துறைப் பேராசிரியர் முனைவர் ஜெ.தேவி சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்தார். அடுத்ததாக திருச்சி, ஜமால்முகமது கல்லூரி, தமிழாய்வுத்துறை, இணைப் பேராசிரியர் முனைவர் க.செல்வராசு நன்னூல் எழுத்து குறித்து போட்டித்தேர்வு வினாக்களைக் கூறி சிறப்பு சொற்பொழிவாற்றினார். தொடர் நிகழ்வாக திருச்சி, தந்தை பெரியார் அரசு கலை (ம) அறிவியல் கல்லூரி (த), தமிழாய்வுத்துறை, இணைப்பேராசிரியர், முனைவர் நா.பிரியா நன்னூல் சொல் வகுப்பினை மாணவர்களுக்கு தெளிவான உரையினை வழங்கினார். நிறைவாக தமிழ்ப் பல்கலைக்கழக இலக்கியத்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் இரா.தனலெட்சுமி நன்றி கூறினார்.

Tags

Next Story