வேளாங்கண்ணி பேராலயத்தில் சிறப்பு திருப்பலி

வேளாங்கண்ணி பேராலயத்தில் சிறப்பு திருப்பலி

சிறப்பு திருப்பலியில் பங்கேற்றவர்கள்

ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு, வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

ஆங்கிலப் புத்தாண்டு: வேளாங்கண்ணி பேராலயத்தில் சிறப்பு திருப்பலி ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு, வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

கீழை நாடுகளின் லூர்து என்று அழைக்கப்படும் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னைப் பேராலயத்தில் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, பேராலாய வளாகத்தில் உள்ள புனித சேவியர் திடலில் சிறப்பு திருப்பலி ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

தமிழ், ஆங்கிலம் உள்பட பல்வேறு மொழிகளில் திருப்பலி நிறைவேற்றுதல் உள்ளிட்ட வழிபாடுகள் நடைபெற்றன. தஞ்சாவூர் மறைமாவட்ட தஞ்சாவூர் மறைமாவட்ட பரி பாலகர் எல்.சகாயராஜ் சிறப்புத் திருப்பலிகளை நிறைவேற்றி வைத்தார்.

பேராலய அதிபர் சி. இருதயராஜ் அடிகளார், பங்குத்தந்தை அற்புதராஜ் மற்றும் பொருளாளர் வீ.உலகநாதன்,உதவி பங்குத் தந்தையர்கள் டேவிட் தனராஜ், ஆண்டோ ஜேசுராஜ்,வழிபாடுகளை மேற்கொண்டனர். தொடர்ந்து நள்ளிரவு 12.01 மணிக்கு 2024-ஆம் ஆண்டு பிறப்பு அறிவிக்கப்பட்டது.

தஞ்சாவூர் மறைமாவட்ட பரி பாலகர் எல்.சகாயராஜ் மேடையில் வைக்கப்பட்டிருந்த குத்துவிளக்கை ஏற்றி புத்தாண்டு பிறந்ததை அறிவித்தார். பின்னர் பவனியாக எடுத்து வரப்பட்ட விவிலியம் மறைமாவட்ட ஆயரிடம் கொடுக்கப்பட்டது. புத்தாண்டை வரவேற்கும் விதமாக அங்குள்ள மக்களிடம் அதை உயர்த்தி காட்டினார்.

இதையடுத்து வழிபாட்டில் பங்கேற்றவர்கள் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். புதிய ஆண்டை வரவேற்கும் விதமாக வாண வேடிக்கைகள் நடைபெற்றன.

பேராலயம், உபக்கோயில்கள், வளாகப் பகுதிகள் மற்றும் அலங்கார வளைவுகள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. பேராலயம், முக்கியச் சாலைகள், கடற்கரை பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags

Next Story