கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்

கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்

நத்தத்தில் கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.

நத்தத்தில் கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
நத்தம் கால்நடை மருந்தக உதவி மருத்துவர் சிங்கமுத்து தலைமையில் கோபால்பட்டி உதவி மருத்துவர் முருகானந்தம், ஆய்வாளர் மாரிமுத்து, பராமரிப்பு உதவியாளர் செந்தில்குமார் உள்ளிட்ட குழுவினர் சிகிச்சை அளித்தனர். இதில் ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி, சினைப் பரிசோதனை, மலட்டுத் தன்மை நீக்க சிறப்பு சிதிச்சை, குடற்புழு நீக்கம், நோய் மாதிரி ஆய்வு பணி, காளைகளுக்கு ஆண்மை நீக்கம், செயற்கைமுறை கருவூட்டல், கோழிக் கழிச்சல் தடுப்பூசி போன்ற சிகிச்சை பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் கால்நடை வளர்ப்பு தொடர்பான தொழில்நுட்ப ஆலோசனை வழங்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

Tags

Next Story