கால்நடைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் 300தடுப்பு ஊசிகள்

கால்நடைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் 300தடுப்பு ஊசிகள்

சிறப்பு மருத்துவ முகாம்


வேட்டவலம் திருவானைமுகம் ஊராட்சியில்கால்நடைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் 300 தடுப்பு ஊசிகள் போடப்பட்டது

திருவண்ணாமலை மாவட்டம் திருவானைமுகம் ஊராட்சியில் நடந்த சிறப்பு மருத்துவ முகாமில் 300 கால்நடை களுக்கு தடுப்பு ஊசி போடப்பட்டது. வெறையூர் அடுத்த திருவானைமுகம் ஊராட்சியில் கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் சக்திவேல் தலைமை தாங்கி முகாமினை தொடங்கி வைத்தார். துணைத் தலைவர் பவுன்குமார் முன்னிலை வகித்தார்.

கால்நடை மருத்துவர் ராஜேஸ்வரி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஞானசுந்தரி மாரிமுத்து கலந்து கொண்டு சிறந்த கிடாரி கன்றுகள் வளர்ப்பவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கினார். முகாமில் கால் நடை மருத்துவர் ராஜேஸ்வரி தலைமையில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் ஆதிமூலம் மற்றும் செயற்கை முறை கருவூட்டலார் சங்கர் ஆகியோர் கொண்ட மருத்துவ குழுவினர் 300 க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு தடுப்பூசி பணி, செயற்கை முறை கருவூட்டல், குடற்புழு நீக்கம், ஆண்மை நீக்கம், மலடு நீக்கம், சுண்டுவாத அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகளை மேற்கொண்டனர். முடிவில் பால் கூட்டுறவு சங்க செயலாளர்கள் புருசோத்தமன், சேகர் நன்றி கூறினர்.

Tags

Next Story