மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் மற்றும் சிறப்பு மருத்துவ முகாம்

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் மற்றும் சிறப்பு மருத்துவ முகாம்

நாமக்கல் மாவட்டத்தில் மாற்றுதிறனாளிகளின் நலன்கருதி நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு உட்கோட்டத்தில் வருவாய் கோட்டாட்சியர்களின் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் மற்றும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. திருச்செங்கோடு உட்கோட்டம், குமாரபாளையம் வட்டத்தில், 27.01.2024 (சனிக்கிழமை) அன்று பள்ளிபாளையம் ஜி.வி. மஹாலிலும், நாமக்கல் உட்கோட்டம், மோகனூர் வட்டத்தில், 30.01.2024 (செவ்வாய் கிழமை) அன்று மோகனூர் சர்மி மஹாலிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் மற்றும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.

மேற்படி முகாமில் மாற்றுத்திறனாளிகளின் உடல் தன்மை குறித்து பரிசோதனை செய்வதற்கு குழந்தைகள் நல மருத்துவர், காது, மூக்கு தொண்டை நிபுணர், எலும்புமுறிவு சிகிச்சை மருத்துவர், மனநல சிகிச்சை மருத்துவர், கண் சிகிச்சை மருத்துவர் மற்றும் செவித்திறன் பரிசோதகர் ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் கலந்து கொள்வர். இச்சிறப்பு மருத்துவ முகாமில் மாற்றுதிறனாளிகளுக்கு புதியதாக அடையாள அட்டை வழங்குதல், ஏற்கனவே உள்ள அடையாள அட்டை புதுப்பித்தல், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பதிவு, ஆதார் அட்டை பதிவு, UDID அட்டை வழங்குதல் ஆகியவை மேற்கொள்ளப்படும். இம்முகாம்களில் பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளும் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் மற்றும் மற்றும் சிறப்பு மருத்துவ முகாம்களில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தெரிவித்துள்ளார்.

Tags

Next Story