மாற்றுத்திறன் குழந்தைகள் சிறப்பு மருத்துவ முகாம் - நாளை தொடக்கம்

மாற்றுத்திறன் குழந்தைகள் சிறப்பு மருத்துவ முகாம் - நாளை தொடக்கம்

மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் 

மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நாளை துவங்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் தெரிவித்தார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில், உள்ளடக்கிய கல்வியின் கீழ் 2307 மாற்றுத்திறன் குழந்தைகள் உள்ளனர். மாற்றுத்திறன் குழந்தைகள் அனைவருக்கும் கல்வி வழங்குவதற்கு தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 18 வயதுக்குட்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளை முறையான மதிப்பீடுசெய்து, அவர்களுக்கு தேவையான உதவி உபகரணங்கள் வழங்க மாணவர்களை தேர்வு செய்தல், அடையாளஅட்டைகள் வழங்குதல், மருத்துவ உதவிகள் மற்றும் சிறப்பு தேவைகளை கண்டறிதல் மற்றும் மத்திய – மாநில அரசுகளின் கல்வி உதவித்தொகை பெறுதல் மற்றும் அறுவை சிகிட்சை தேவைப்படும் பயனாளிகளைகண்டறிந்து, அறுவை சிகிட்சைக்கு பரிந்துரை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படும். கன்னியாகுமரிமாவட்டத்தில் மருத்துவமுகாம்களை சுகாதாரத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இணைந்து அனைத்து வட்டாரவளமையங்களிலும் காலை 10.00 மணி முதல் 1.00 மணிவரை நடைபெறுகிறது. 1 அகஸ்தீஸ்வரம் 31.10.2023 (செவ்வாய்) SLB அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி, நாகர்கோவில் 2 தக்கலை 02.11.2023(வியாழன்) அரசு மேல்நிலைப்பள்ளி, தக்கலை 3 மேல்புறம் 03.11.2023 (வெள்ளி) அரசு உயர்நிலைப்பள்ளி, மேல்புறம் 4 தோவாளை 07.11.2023(செவ்வாய்) அரசு உயர்நிலைப்பள்ளி, இறச்சகுளம் 5 திருவட்டார் 08.11.2023 (புதன்) அரசு உயர்நிலைப்பள்ளி, திருவட்டார் 6 முஞ்சிறை 09.11.2023(வியாழன்) அரசு மேல்நிலைப்பள்ளி, முஞ்சிறை 7 இராஜாக்கமங்கலம் 10.11.2023(வெள்ளி) அரசு மேல்நிலைப்பள்ளி, இராஜாக்கமங்கலம் 8 குருந்தன்கோடு 15.11.2023(புதன்) அரசு(ம) மேல்நிலைப்பள்ளி, கடியப்பட்டணம் (இருப்பு) மணவாளக்குறிச்சி 9 கிள்ளியூர் 16.11.2023(வியாழன்) அரசு மேல்நிலைப்பள்ளி, கருங்கல் இந்த மருத்துவ முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை புதிதாக பெற வேண்டிய மாற்றுத்திறனாளிகள் ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், மருத்துவ பரிசோதனை சான்றுகள், புகைப்படம்-4 ஆகியவற்றுடனும், அடையாள அட்டை புதுப்பித்தல் செய்ய வேண்டிய மாற்றுத்திறனாளிகள் ஏற்கனவே பெற்றுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை அசல் மற்றும் மேற்குறிப்பிட்டுள்ள ஆவணங்களுடன் கலந்து கொண்டு பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் தெரிவித்தார்.

Tags

Next Story