பேராவூரணி அருகே காய்ச்சல் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம்
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஒன்றியம், மேல ஒட்டங்காட்டில் தமிழக முதல்வர் உத்தரவின்படி, தஞ்சாவூர் ஆட்சியர் தீபக் ஜேக்கப் அறிவுறுத்தலின்படி, மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் கலைவாணி வழிகாட்டலில் சிறப்பு காய்ச்சல் தடுப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு பேராவூரணி வட்டார மருத்துவ அலுவலர் அருள் தலைமை வகித்தார். மருத்துவ அலுவலர் தீபா தலைமையிலான, மருத்துவக் குழுவினர் நூற்றுக்கணக்கான பொதுமக்களை பரிசோதனை செய்து சிகிச்சையும், காய்ச்சல் தடுப்பு மருத்துவ ஆலோசனையும் வழங்கினர். முகாமில், ஒட்டங்காடு ஊராட்சி மன்ற தலைவர் ராஜாக்கண்ணு, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சந்திரசேகரன், சுகாதார ஆய்வாளர்கள் பூவலிங்கம், தவமணி, ஒன்றியக் குழு உறுப்பினர் பாக்கியம் முத்துவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் .
Next Story