அகிலி மாத்தூர் ஊராட்சியில் பொதுமக்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

அகிலி மாத்தூர் ஊராட்சியில் பொதுமக்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

மேல்மருவத்தூர் அருகே உள்ள அகிலி மாத்தூர் ஊராட்சியில் பொது மக்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.


மேல்மருவத்தூர் அருகே உள்ள அகிலி மாத்தூர் ஊராட்சியில் பொது மக்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே உள்ள அகிலி மாத்தூர் ஊராட்சியில் பொது மக்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. மேல்மருவத்தூர் அருகே உள்ள அகிலி ஊராட்சியில் கடந்த 2 வாரங்களாக கிராம மக்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வாந்தி வயிற்றுப்போக்கு மயக்கம் என கிட்டத்தட்ட 25 முதல் 30 நபர்களுக்கு மேல் பாதிக்கப்பட்டனர். இந்நிலவரத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களிடம் அகிலி ஊராட்சியை சேர்ந்த சைதை சங்கரிடம் கிராம மக்கள் தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் உடனடியாக அச்சிறுப்பாக்கம் மருத்துவமனையின் மருத்துவ அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு பேசி உடனடியாக கிராமத்திற்கு சிறப்பு மருத்துவ முகாமை ஏற்பாடு செய்தனர். இந்த மருத்துவ முகாமை ஏற்பாடு செய்த சைதை சங்கர் அவர்களுக்கு அப்பகுதி கிராம மக்கள் சமூக வலைதளங்களில் பாராட்டுகள் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

Tags

Next Story