நெசவாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்

நெசவாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்

மருத்துவ முகாம் 

நெசவாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் புதுக்கடை அருகே அம்சி உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது
கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நெசவாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் புதுக்கடை அருகே அம்சி உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. ரோட்ரி கிளப் ஆப் எலைட் தலைவர் ஜோஸ் டைட்டஸ் தலைமை வகித்தார். முகாம் திட்ட இயக்குனர் முருகன், பள்ளி தாளாளர் அம்சி முகுந்தன் நாயர், பள்ளி தலைமை ஆசிரியை லட்சுமி ஸ்ரீ, அகர்வால் கண் மருத்துவமனை முதன்மை அலுவலர் வெங்கடேஷ் ஆகியோர் குத்து விளக்கேற்றி மருத்துவ முகாமை தொடங்கி வைத்தனர். டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவர்கள் கண் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். தமிழக அரசின் புத்தாக்கத் திட்டத்தின் கீழ் மகளிருக்கு மார்பகம் மற்றும் கர்ப்பப்பை, வாய்ப்புற்று நோய், புற்று நோய், சர்க்கரை நோய், ரத்த கொதிப்பு பரிசோதனைகள் செய்யப்பட்டு மருந்துகள் வழங்கப்பட்டது. இம்முகாமில் அரசகுளம், ஆக்கவிளாகம், மங்கட்டான் குழி, தோட்டவாரம், அம்சி நேஷனல் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க மேலாளர்கள் மற்றும் நெசவாளர்கள் உட்பட 300 பேர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

Tags

Next Story