நடமாடும் வாகனத்தில் சிறப்பு மருத்துவ முகாம்

நடமாடும் வாகனத்தில் சிறப்பு மருத்துவ முகாம்

நடமாடும் வாகனத்தில் சிறப்பு மருத்துவ முகாம்

65க்கும் மேற்பட்ட்டவர்கள் முகாமில் பங்கேற்றனர்
காஞ்சிபுரம் மாவட்டத்தில், 'மிக்ஜாம்' புயல் குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார் வட்டாரங்களில் மிக கடுமையான பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது. நீரில் மூழ்கிய நெற்பயிர்கள் பாதிப்பு, ஏரிகளின் பாதிப்பு, சாலைகள் சேதம் ஆகிய விபரங்களை, அந்தந்த துறை அலுவலர்கள் கணக்கெடுத்து வருகின்றனர். குறிப்பாக, பள்ளி வளாகங்கள், பள்ளி மைதானங்களில் தேங்கி இருக்கும் தண்ணீரை அகற்றி, பிளீச்சிங் பவுடர் துாவி சுகாதார தடுப்பு பணிகளை, அந்தந்த பள்ளி நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். இதுதவிர, காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கிராமங்களில், நடமாடும் வாகனத்தின் வாயிலாக, சிறப்பு மருத்துவ முகாம் நடந்து வருகிறது. அதன்படி, கோவிந்தவாடி ஊராட்சியில், நேற்று காலை நடந்த சிறப்பு மருத்துவ முகாமிற்கு, ஊராட்சி தலைவர் சரிதா தலைமை வகித்தார். மருத்துவர் வெங்டேசன் தலைமையில், 85 பேர் பங்கேற்றனர். இதேபோல, படுநெல்லிகிராமத்திலும் நடந்தது.

Tags

Next Story