சிறப்பு மருத்துவ முகாம்: மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு

சிறப்பு மருத்துவ முகாம்: மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு

மேயர் ஆய்வு 

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்ற மருத்துவ முகாமை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி பகுதிகள் மற்றும் 12 வட்டாரங்களில் சிறப்பு காய்ச்சல் மருத்துவ முகாம்கள் நேற்று நடைபெற்றது. தூத்துக்குடி மாநகராட்சியில் போல்போட்டை, நோதாஜி நகர், அய்யர்விளை, தஸ்நேவிஸ்நகர், லூர்தம்மாள்புரம், சக்தி விநாயகபுரம், பூபால்ராயர்புரம், அந்தோணியார்புரம், முருகேசன் நகர், 3ம் மைல் உள்ளிட்ட பகுதிகளில் மருத்துவ முகாம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் நடைபெறும் முகாமை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டார். பின்னர் அவர் கூறும்போது, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட நிகிலேசன் நகர் மற்றும் மீன் வளக் கல்லூரி பின்புறம் உள்ள பகுதிகளில் மழைநீர் தேங்கிய பகுதிகளையும் மழை நீர் அகற்றும் பணிகளையும் டீச்சர்ஸ் காலனி பகுதியில் நடைபெற்ற மருத்துவ முகாமினையும் பார்வையிட்டேன். இந்த சிறப்பு மருத்துவ முகாம்கள் தொற்றுகளிலிருந்து மக்களை பாதுகாக்கும் வண்ணம் 15 மேற்பட்ட இடங்களில் நடைபெற்று வருகின்றது.

மேலும் மாநகராட்சி சுகாதரப் பணியாளர்கள் ௩௦௦ பேர் வீடு வீடாக சென்று மருத்துவ பரிசோதனை செய்து வருகின்றனர். தற்பொழுது மாநகரில் மழை நீரினால் பாதிப்படைந்த பகுதிகள் பள்ளமான பகுதிகள் ஆகையால் வருங் காலங்களில் மழை நீர் இந்த பகுதிகளில் தேங்காதவாறு வடிகால் மற்றும் சாலை வசதிகள் செய்து தரப்படும் என்று தெரிவித்தார். திமுக பகுதி செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ் குமார், மாமன்ற உறுப்பினர்கள் ஜான் சீனிவாசன், சந்திரபோஸ், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags

Next Story