வட்டாட்சியர் அலுவலகத்தில் சிறப்பு கூட்டம்

வட்டாட்சியர் அலுவலகத்தில் சிறப்பு கூட்டம்

சிறப்பு கூட்டம் 

தமிழக‌ அரசு கனமழை முன்னெச்சரிக்கை அறிவிப்பு செய்துள்ளதையடுத்து சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் சிறப்பு ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

மே.17, 18, 19 ஆகிய வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் கனமழை பெய்ய உள்ளதாக தமிழகரசின் சார்பில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டுமென சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதனையடுத்து சங்ககிரி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற சிறப்பு ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

இதில் கனமழை பெய்தால் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளை கண்டறிந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அருகில் உள்ள திருமணமண்டபங்கள், பள்ளிகளில் தங்க வைக்கும் பணிகளில் ஈடுபடுதல், பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் செய்தல் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு ஆலோசனைகள் கூறப்பட்டுள்ளது.

இதில் தலைமையிடத்து துணை வட்டாட்சியர் தமிழ்ச்செல்வி, மண்டல துணை வட்டாட்சியர் சாஜிதாபேகம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மின்வாரியம், தீயணைப்பு, காவல்துறை அலுவலர்கள், மருத்துவத்துறையின் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story