வேளாண் உட்கட்டமைப்பு நிதித்திட்டம் குறித்த சிறப்பு கூட்டம் - அதிகாரிகள் பங்கேற்பு

வேளாண் உட்கட்டமைப்பு நிதித்திட்டம் குறித்த சிறப்பு கூட்டம்  - அதிகாரிகள் பங்கேற்பு

சிறப்பு கூட்டம்

வேளாண் உட்கட்டமைப்பு நிதித்திட்டம் குறித்த சிறப்பு கூட்டத்தில் அதிகாரிகள் பங்கேற்றனர்.

சிவகங்கை மாவட்டத்தில் வேளாண்மை உட்கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ் வேளாண் சார்ந்த தொழில்கள் துவங்குவதற்கு வங்கிகள் மூலம் கடனுதவி மற்றும் வட்டி சலுகை திட்டம் குறித்து விவசாயிகள் , தொழில்முனைவோர் மற்றும் வோளாண்மைதுறை தோட்டக்கலை துறை அலுவலர்களுக்கான சிறப்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையில் நடைபெற்றது. இ

ந்நிகழ்ச்சிக்கு வேளாண்மை துணை இயக்குனர் (வேளாண் வணிகம்) செல்வி. ப. தமிழ்செல்விவரவேற்புரை நிகழ்த்தி திட்ட விளக்கவுரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய மாவட்ட ஆட்சியர், விவசாயிகள் விளைபொருட்களை மதிப்பு கூட்டி விற்பதன் மூலம் நல்ல வருவாய் பெறலாம்.

இத்திட்டத்தின் மூலம் முதன்மை பதப்படுத்தும் நிலையங்கள், குளிர்பதனக்கிடங்குகள், அறுவடை இயந்திரங்கள் வேளாண் சார்ந்த இயந்திர வாடகை மையம் ஆகியவை அமைக்கலாம் என்றும், அனைத்து தேசியமயமாக்கபட்ட வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகள் கடன் பெற்றுக்கொள்ளலாம் என்றும், தெரிவித்தார். இதில் அதிகபட்சமாக 2 கோடி வரையிலான கடனுக்கு ஏழு ஆண்டு காலத்திற்கு 3 சதவீதம் வட்டி மானியம் வழங்கப்படுகிறது. எனவே மாவட்டத்தில் உள்ள வேளாண்மை துறை சார்ந்த அலுவலர்கள் இத்திட்டம் பற்றி விவசாயிகளுக்கு எடுத்து கூறி ஒரு பாலமாக செயல்படவேண்டும் என்று வலியுறுத்தினர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர், நபார்டு வங்கி மேலாளர் மேலாளர், மாவட்ட தொழில் மையம், கூட்டுறவு துறை அதிகாரிகள் மற்றும் வேளாண்மை உதவி இயக்குனர்கள், தோட்டக்கலை உதவி இயக்குனர்கள் வேளாண்மை வணிக அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஆலோசகர் மோகன் ரவி கலந்து கொண்டனர். மாவட்டத்தில் உள்ள உழவர் உற்பத்தியாளர் நிறுவன உறுப்பினர்கள் வேளாண் உட்கட்டமைப்பு நிதியின் கீழ் பயனடைந்த பயனாளிகள் தங்களுடைய கருத்துக்களை அனைவருடனும் கலந்துரையாடினர். கூட்டத்தில் கலந்து கொண்ட உழவர் உற்பத்தியாளர் நிறுவன பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் பகிர்ந்து கொண்ட கருத்துக்கள் மிகவும் பயனள்ளதாக இருந்ததாக கூறினர். மேலும் இந்த திட்டங்களில் கடன் பெறுவது விபரங்கள் குறித்து அறிந்து கொள்ள மோகன் ரவி மாவட்ட ஆலோசகர் 9080481306 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags

Next Story