சிறப்பு பட்டா முகாம் ஆயிரக்கணக்கானோர் மனு

சிறப்பு பட்டா முகாம் ஆயிரக்கணக்கானோர் மனு
X

சங்ககிரியில் நடைபெற்ற சிறப்பு பட்டா முகாமில் சங்ககிரி, எடப்பாடி வட்டங்களுக்குபட்ட பொதுமக்களிடமிருந்து பட்டா மாறுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெற்று 168 பேருக்கு வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்பட்டது.

சங்ககிரியில் சிறப்பு பட்டா முகாம் ஆயிரக்கணக்கானோர் மனு அளிப்பு

முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவினையொட்டி சேலம் மாவட்டம், சங்ககிரி வருவாய் உள்கோட்டத்திற்குட்பட்ட சங்ககிரி, எடப்பாடி இரு வட்டங்களுக்கான சிறப்பு பட்டா முகாம் வருவாய்கோட்டாட்சியர் லோகநாயகி தலைமையில் நடைபெற்றது. இம்முகாமில் சங்ககிரி, எடப்பாடி வட்டங்களுக்குபட்ட பொதுமக்களிடமிருந்து பட்டா மாறுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றார். மேலும் அவர் சங்ககிரியில் 103 பேருக்கும், எடப்பாடியில் 65 பேர் உள்பட மொத்தம் 168 பேருக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கப்பட்டது. மேலும் இம்முகாமில் பட்டா மாறுதல், பட்டா, பட்டாவில் பெயர் திருத்தம், நீக்கம், இதர கோரிக்கைகள் குறித்து எடப்பாடி வட்டத்தில் 484 பேரும், சங்ககிரி வட்டத்தில் 1432 பேரும் உள்பட மொத்தம் 1916 பேர் மனு அளித்துள்ளனர். இதில் வட்டாட்சியர்கள் அறிவுடைநம்பி (சங்ககிரி), வைத்தியலிங்கம் (எடப்பாடி), சங்ககிரி சமூக நலத்துறை தனி வட்டாட்சியர் ரமேஷ், தலைமையிடத்து துணை வட்டாட்சியர் வி.தமிழ்ச்செல்வி (சங்ககிரி), ராஜமாணிக்கம் (எடப்பாடி), எடப்பாடி மண்டலதுணை வட்டாட்சியர் சிவராஜ், சங்ககிரி, எடப்பாடி வட்ட நிலஅளவைத்துறையினர் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

Next Story