மாவட்ட காவல் அலுவலகத்தில் சிறப்பு மனு முகாம்

பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடந்த சிறப்பு மனு முகாமில், 39 மனுக்கள் பெறப்பட்டன.

பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் சிறப்பு மனு முகாம், 39 மனுக்கள் பெறப்பட்டன.

பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில்ஜூன் 26 ஆம் தேதி சிறப்பு மனு முகாம் நடைபெற்றது. இந்த சிறப்பு மனு முகாமில் கலநது கொண்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பொதுமக்களிடம் மனுவைப் பெற்றார். மேலும் இந்த சிறப்பு மனு முகாமில்கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதியழகன் மற்றும் துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் வளவன், தனசேகரன், மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையம் மற்றும் சிறப்பு பிரிவு காவல்துறையினர் கலந்து கொண்டனர். இந்த சிறப்பு மனு முகாம் மூலம் 39 மனுக்கள் பெற்றப்பட்டு சம்மந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒவ்வொரு வாரமும் புதன் கிழமை மாவட்ட காவல் அலுவலகத்தில் சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெறும் எனவும் பொது மக்கள் இந்த சிறப்பு முகாமினை பயன்படுத்திக் கொள்ளுமாறும் மனு விசாரணை முகாமில் கலந்து கொள்ள வருபவர்கள் மாவட்ட காவல் அலுவலகம் வருவதற்கு ஏதுவாக மாவட்ட காவல்துறை சார்பாக பாலக்கரையிலிருந்து காவல் அலுவலகத்திற்கும் மீண்டும் காவல் அலுவலகத்திலிருந்து புதிய பேருந்து நிலையம் செல்ல பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது என மாவட்ட காவல்துறை மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story