சிறப்பு மனு நீதி நாள் முகாம்!
சிறப்பு மனு நீதி நாள் முகாம்!
ராணிப்பேட்டை சிறப்பு மனு நீதி நாள் முகாமில் 294 பயனாளிகளுக்கு 70 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்
மத்திய அரசின் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு மூலம் வெளிமாநிலத்தவர்கள் இங்கே வேலை செய்தாலோ அல்லது நம்ம ஊரில் இருந்து வெளி மாநிலத்தில் வேலை செய்தாலோ அருகில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி ஒன்றியத்திற்குட்பட்ட வெங்கடாபுரம் கிராமத்தில் இன்று சிறப்பு மனுநீதி நாள் முகம் மாவட்ட ஆட்சியர் திருமதி வளர்மதி தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு சுரேஷ் , ராணிப்பேட்டை கோட்டாட்சியர் மனோன்மணி ஊராட்சி மன்ற தலைவர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த சிறப்பு மனுநீதால் முகாமில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, மாவட்ட விளங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை, கூட்டுறவுத்துறை, சமூக பாதுகாப்பு துறை, குழந்தை பாதுகாப்பு திட்டத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய மாநில அரசு திட்டங்கள் குறித்து அந்தந்த துறை அலுவலர்கள் பொது மக்களுக்கு எடுத்து கூறினர். இந்த நிகழ்வில் பேசிய மாவட்ட ஆட்சியர் திருமதி வளர்மதி மத்திய அரசின் ஒரே நாடு ஒரே ரேசன் அடிப்படையில் நம்ம ஊரில் உள்ளவர்கள் வெளி மாநிலத்தில் வேலை செய்தாலோ அல்லது வெளி மாநிலத்திலிருந்து நம்ம ஊரில் வேலை செய்தாலோ அவர்கள் அருகில் உள்ள நியாய விலைக் கடைகளில் ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் இதனை பொதுமக்கள் தெரிந்துகொண்டு பயன்பெற வேண்டும் எனவும் மற்றவர்களுக்கு இந்த தகவலை தெரிவிக்க வேண்டும் என கூறினார். அதேபோல் தேர்தல் நெருங்கி வருகின்ற நேரத்தில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் இணைத்து கொள்ள வேண்டும் எனவும் 100 சதவீத வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் என மக்களுக்கு தெரிவித்தார். இந்த சிறப்பு மனுநீதி நாள் முகாமில் 294 பயனாளிகளுக்கு 70 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வளர்மதி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் பொதுமக்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.
Next Story